காவலன் SOS மூலம், காப்பற்றப்பட்ட பெண்.! 6 நிமிடம் தான்.. அதிரடி காட்டிய போலீஸ்.!   - Seithipunal
Seithipunal


சென்னை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் அத்துமீற முயன்ற போது காவலன் செயலி மூலமாக சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர். 

ஆர்.கே. நகர் பகுதியில் அடுக்குமாடி குர்டியிருப்பு ஒன்றில், ப்ரீத்தி என்ற பெண் தனியாக அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது கொரியர் வந்திருப்பதாக கூறி இரு இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர். 

இதனால், சந்தேகமடைந்த ப்ரீத்தி உஷாராகி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்திய காவலன் SOS என்ற செயலியில் ஆபத்திற்கு உதவும், எஸ்.ஓ.எஸ்(SOS) பட்டனை அழுத்தி இருக்கின்றார். 

தகவலை பெற்ற அடுத்த 6 நிமிடங்களிலேயே ஆர்.கே. நகர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு அதிரடியாக நுழைந்து மர்ம நபர்கள் இருவரையும் மடக்கி கையும், களவுமாக பிடித்து இருக்கின்றனர். 

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பெயர் சலீம், தாவூத் என்பதும், இருவரும் அதீத மது போதையில் இருந்ததும் தெரியவந்துலது. காவலன் செயலி மூலமாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும், அந்த ஆப் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. 

ஏற்கனவே பல சம்பவங்கள் இது போன்று நடைபெற்று பல பெண்களில் காவல் துரையினர் மீட்டு இருக்கின்றனர். பெண்களின் நலன் கருதி அதுகுறித்து எந்த தகவல்களையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GIRL SAFE USING KAVALAN SOS APP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->