ஸ்ட்ரைக் எதிரொலி.. ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்வு..!! சென்னை காவல்துறை விடுத்த வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 500 பேர் நாளை நியமிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் சென்னையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டன.

சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் இயக்கப்பட்டு வந்த மாநகர அரசு பேருந்துகள் திடீரென ஆங்காங்கே நிறுத்தப்பட்டு ஓட்டுநர்களும் நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். அரசு போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

ஆட்டோக்களில் வழக்கத்தை விட ரூ.75 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை செல்ல கால் டாக்ஸிகள் கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்து துறை ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் பிற அரசு போக்குவரத்து துறை பேருந்துகள் தற்போது தற்காலிகமாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவரவர் சேரும் இடத்திற்குச் செல்ல உதவுமாறு விதிகளுக்கு உட்பட்டு பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறு அனைத்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி, கால் டாக்ஸி, மேக்சி கேப் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GCP request auto and taxi should charge according rules


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->