இது வெறும் பேனாவாக மட்டும் இருக்க கூடாது.! ஒரு வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும் - காயத்ரி ரகுராம் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- பேனா என்பது அனைவருக்கும் பொதுவானது, சென்னை மெரினாவில் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

அவ்வாறு அமைக்கப்படும் இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைத்து சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில், புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் கூடிய தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். 

பொதுவாக பேனா என்பது சிறந்த கருவியாக பல விஷயங்களைக் குறிக்கும். இது ஒரு சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அதனால், இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக மட்டும் இருக்கக்கூடாது.

அனைவருக்கும் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத அளவிற்கு இந்த பேனா மிக வலுவாக இருக்க வேண்டும். இது  தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும். 

இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாகவும் இருந்தால், அதன் மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டி அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். இது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது. இதற்கு பொதுமக்களின் பணம் ஏன்?" என்று அவர் தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raguram tweet in support to Karunanidhi pen memorial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->