50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - தமிழக காவல்துறை தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா பயன்பாட்டுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆபரேஷன் கஞ்சா வேட்டையின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

முடக்கப்பட்ட 2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. அதில் தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை மூலம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganja sales man 50 crore money paralysis in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->