கள்ளக்குறிச்சி || சொகுசு காரில் கருக்கலைப்பு - புகாரால் சிக்கிய 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.

இந்த மருந்துக்கடையில், அசகளத்தூரை சேர்ந்த சிவகுரு மனைவி கவுதமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருந்துக்கடையில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி தலைமை மருத்துவர் அகிலன் கொடுத்த புகாரையடுத்து வேப்பூர் போலீசார், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு மருத்துவக்குழுவுடன் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மருந்துக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு சொந்தமான சொகுசு காரை சோதனை செய்ததில் கர்ப்பிணியின் கருவில் வளரும் சிசு ஆணா? அல்லது பெண்ணா? என்று கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்தது. இதையடுத்து போலீசார், மருந்துக்கடையில் இருந்த மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கருக்கலைப்பு செய்வதற்கு கவுதமி உடந்தையாக இருந்ததும், அசகளத்தூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ், குமாரசாமி மகன் கண்ணதாசன் உள்ளிட்டோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும், கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்துக்கடையில் இருந்த கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for abortion in kallakurichi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->