வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை தேர்தல் ஆணையர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- " வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி, கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் வைக்கப்படும். 

இந்த இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. பின்னர் அந்த பிரச்சினை உடனே சரி செய்யப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four layers of protection in vote machine box


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->