விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை காகமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் மதியம் ஒரு மணி அளவிற்கு அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

formar chief minister o panneer selvam tribute vijayakant death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->