விநாயகர் சதுர்த்தி எதிரொலி - பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.!!
flower price increase in thovalai and mattuthavani flower market for vinayagar chathurthi
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மிக பிரமாண்டமான பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தப் பூக்களை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் இந்தப் பூக்கள் விலையில் மாற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று மல்லிகை, அருகம்புல், கேந்தி என்று அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதேபோல் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது மல்லி பூ கிலோவுக்கு ரூ. 2,500 க்கும், முல்லைப் பூ ரூ.1,000, செவ்வந்தி, பிச்சி பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600, ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
flower price increase in thovalai and mattuthavani flower market for vinayagar chathurthi