திமிங்கல எச்சம் கடத்தியதாக அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


திமிங்கல எச்சம் கடத்தியதாக அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது.!!

மிகப் பெரிய கடல்வாழ் உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த எச்சம் சர்வதேச அளவில் அதிக விலைக்குப் போவதால் திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விருதுநகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.

அந்த தகவலின் படி வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு வாகன சோதனையும் நடத்தினர். இதற்கிடையே விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதன் படி அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த எச்சத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மூன்று பேர் என்று மொத்தம் 5 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for kidnape whale remains


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->