முடிவுக்கு வருகிறது மீன்பிடித் தடைக்காலம்.. இனி மீன் விலை குறையும்..!
Fishing Prohibition Period will Become to an End
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீன் பிடி தடைக்காலம் என்று கூறுவர்.
அந்த வகையில் இந்த வருடம் 61 நாள் மீன் பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இதையடுத்து விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் எதுவும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது. இதையடுத்து தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார், திரேஸ்புரம் ஆகிய இடங்களில் மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த 61 நாட்கள் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, மீன் பிடி வலைகளை சரி செய்வது போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தனர். மேலும் புதிய வலைகளையும் வாங்கி வைத்துள்ளனர். மேலும் விசைப்படகுகளை சீரமைக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த தடைக்காலம் முடிய 8 நாட்களே உள்ள நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தியும், படகில் உள்ள இயந்திரங்களை இயக்கியும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடைக் காலத்தால் கடந்த 61 நாட்களாக வெறிச்சோடி காணப்படும் தூத்துக்குடி துறைமுகம், இன்னும் ஒரு வாரத்தில் களை கட்டத் தொடங்கும். இதையடுத்து இப்போது ஏறுமுகமாக உள்ள மீன்களின் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.
English Summary
Fishing Prohibition Period will Become to an End