நீட் தேர்வு எழுத வந்த மாணவன் - டீ சர்ட்டை கழற்றி கொடுத்து வழி அனுப்பிய தந்தை.!!
father give half hand t shirt to son for student denied entry in neet exam
இன்று நாடு முழுவதும் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
அதன் படி தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுதினர். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் நீட் எழுதவந்த மாணவர் ஒருவர் முழுக்கை டீசர்ட்டுடன் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த மாணவரின் அப்பா போலீஸ் அறிவுறுத்தலுக்கு பின் தான் அணித்திருந்த அரைக்கை டீசர்ட்டை பையனிடம் கழற்றிக் கொடுத்தார். அதனை மாற்றிக் கொண்ட பின் மாணவனுக்கு தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.
English Summary
father give half hand t shirt to son for student denied entry in neet exam