மேட்டூர் அணை நீர் வரத்து குறைவினால் விவசாயிகள் கவலை.!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை நீர் வரத்து குறைவினால் விவசாயிகள் கவலை.!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 865 அடியிலிருந்து 727 அடியாக குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.48 அடியிலிருந்து 103.41 அடியாக குறைந்துள்ளது. 

தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 69.33 டிஎம்சியாக உள்ளது. இந்த மேட்டூர் அணையிலிருந்து அனல்மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்காக வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு இதே நேரத்தில் கர்நாடகவிலிருந்து தமிழகத்துக்கான நீர் வரத்து அதிகளவில் இருந்தது. அதனால், கடந்த ஆண்டு மேட்டூர் அணை மே 24ம் தேதியே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers worry for water level decrease in mettur dam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->