இனிமேல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு!! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!! - Seithipunal
Seithipunal



மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 700 அரசு பள்ளிகளில் 30% சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. 

இந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் மத்தியபிரதேச மாநிலத்தின் கல்வித்துறை மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன் குறைவு தான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள 700 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3500 ஆசிரியர்களுக்கும்  திறனாய்வு தேர்வு நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை போலவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு வரும் ஜூன் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஆசிரியர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்களது தகுதியை குறைக்கப்படும் என்றும், மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வேலையை விட்டு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

exam for government school teacher


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->