பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்.! போக்ஸோவில் கைது செய்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கற்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 16 வயது பள்ளி மாணவி வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 7 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் முன்னாள் ராணுவ வீரரான சேகர் என்பவர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் வீரரான சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex millitary man raped 16 year old girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal