லட்சம் பேரை சேர்த்தாலும் தி.மு.க. ஆட்சி மாற்றப்படுவது உறுதி! -நயினார் நாகேந்திரன்
Even if we recruit lakhs people DMK government will definitely be changed Nainar Nagendran
பா.ஜ.க.தமிழக மாநில தலைவர் ''நயினார் நாகேந்திரன்'' பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,"தமிழகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்த கூட முதலமைச்சர் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற போவதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர்,"தி.மு.க.விற்கு ஆதரவாக வடமாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக எத்தனை லட்சம் பேரை சேர்த்தாலும் தி.மு.க. ஆட்சி மாற்றப்படுவது உறுதி" என்று தெரிவித்தார்.
இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரங்களில்,ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில வாக்காளர்கள் திமுகவிற்காக சேர்க்கப்படுகிறார்களா? என்று கேட்கின்றனர்.
English Summary
Even if we recruit lakhs people DMK government will definitely be changed Nainar Nagendran