தேர்தல், கொரோனா விதிமுறைகளால், ஈரோடு துணிச்சந்தை பாதிப்பு.! வியாபாரிகள் அதிருப்தி.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையில், ஈரோடு துணி சந்தை நடப்பது வழக்கம் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இந்த சந்தை இரவு நேரங்களில் தான் நடக்கும் அதாவது திங்கள் கிழமை இரவு ஆரம்பித்து செவ்வாய் கிழமை இரவு முடிவது தான் வழக்கம்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா  ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் கூடுவது வழக்கம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பலர் இந்த துணி சந்தைக்கு வருவது வழக்கம் தான். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், கைகளில் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து சொல்ல கூடாது என்பது அமலில் இருக்கின்றது. 

அத்துடன், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு சந்தைக்கு வருபவர்களின் எண்னிக்கை குறைந்துள்ளது. இதனால் கோடை சீசன் விற்பனை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode market affected by corona 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->