நில அபகரிப்பு புகாரை விசாரிக்கவிடாமல் தடுத்து வைத்துள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்?.. பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


ரூ.40 இலட்சம் கடனுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டதாக தனியார் நிதி நிறுவனம் மீது இரும்பு வியாபாரி புகார் அளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2014 ஆம் வருடம் மூலப்பாளையம் பகுதியில் பைனான்ஸ் செய்து வரும் பழனிச்சாமி - மைதிலி தம்பதிகளிடம் இருந்து ரூ.40 இலட்சம் கடனாக ஈஸ்வரமூர்த்தி பெற்றுள்ளார். 

இந்த கடனுக்கு தனக்கு சொந்தமான 45 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து எழுதிக்கொண்டு ஈஸ்வரமூர்த்தி ரூ.40 இலட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.40 இலட்சம் கடனுக்கு மாதம் ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில வருடமாக வட்டியை செலுத்தாத நிலையில், தனது நிலத்தை நிதி நிறுவனத்தார்கள் அபகரித்துவிட்டதாக ஈஸ்வரமூர்த்தி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

காவல் துறையினர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இராமலிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தலையீட்டால் ஈஸ்வரமூர்த்தி தரப்பு புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதனையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஈஸ்வரமூர்த்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுதார். பின்னர், ஈஸ்வர மூர்த்தியின் மனுவை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அதனை டி.எஸ்.பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Man Protest at SP Office about Land Occupy by Loan Finance Agency Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->