திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் சோகம்.. விபத்தில் பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் சுண்டக்காம்பாளையம் பகுதியை சார்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் கதிரேசன் (வயது 23). இதே பகுதியை சார்ந்த கந்தன் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 20). கதிரேசனும், சக்திவேலும் பட்டம்பாளையம் பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று பணியை முடித்துவிட்டு அதிகாலை 6.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, இவர்களின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் உயிருக்கு போராடி துடிதுடிக்கவே, கதிரேசன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சக்திவேலை மீட்ட அக்கம் பக்கத்தினர், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்திற்கு காரணமாக இருந்த மற்றொரு வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், விபத்தில் பலியான கதிரேசனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. இதனால் இருதரப்பு வீட்டார்களும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Gopichettiyapalayam Youngster died Accident Shortly Complete Marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal