#BigBreaking | டெபாசிட்டை நெருங்கும் முக்கிய வேட்பாளர்! எட்டமுடியாத இடத்தில ஆளும் திமுக கூட்டணி வேட்பாளர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் 7 சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணக்கையில், தற்போது 8வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நான்காவது இடத்தில் தேமுதிக வேட்பாளரும் உள்ளனர்.

1 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 53747 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 20201 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3939 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் 528 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

தற்போது வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுகவை விட 33546 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னதாக, "பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது" என்று முழுங்கியவரே அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அதிமுக வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட் தொகை பெறுவதற்கு 28000 வாக்குகள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 cong leading ADMK NTK DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->