கர்ப்பிணி என்றும் பாராது மனைவிக்கு பாலியல் தொல்லை.. சோற்றில் விஷம் வைத்து கொலை செய்த மனைவி.! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணியாக இருந்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவனால், மனம்நொந்து விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் மைக்கேல்பாளையம் பகுதியை சார்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மைதிலி. இவர்கள் இருவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது மைதிலி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்த நந்தகுமாரை, அவரது மனைவி மற்றும் நந்தகுமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியாகியுள்ளார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்த அந்தியூர் காவல் துறையினர், நந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் நந்தகுமாரின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, காவல்துறையினர் கர்ப்பிணி மனைவியான மைதிலியிடம் விசாரணை செய்ததில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில், கணவன் நந்தகுமாரின் காமுக சுயரூபம் அதிர்ச்சிதரும் வகையில் வெளியானது. 

மேலும், கர்ப்பிணி என்றும் பாராது பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனின் கொடுமை தாங்க இயலாத பெண்மணி மைதிலி, நந்தகுமாரை கொலை செய்தால் தான் நிம்மதி என்ற விரக்தி எண்ணத்திற்கு தள்ளப்பட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Anthiyur Pregnant wife Murder Husband due to Sexual Torture during Pregnant time


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal