சென்னை, எர்ணாவூர் எண்ணெய் கழிவு விவகாரம்! பசுமை தீர்ப்பாயம் அதிரடி விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னை, எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்தது குறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின்போது "எண்ணெய் கழிவை தெரிந்தே, வேண்டுமென்றே மழை நீரில் கலந்து விட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்று தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்து.  

அப்போது, குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளை காண முடிவதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

தொடர்ந்து, அதிகாரிகள் குழு அமைத்து திங்கள் கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ernavur oil leakage issue Chennai Floods 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->