பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! சேலம் மாணவி ராவணி முதலிடம்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க, ஜூன் மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரைக்கும், 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.87 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். 1.55 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல், இன்று இன்ஜினியரிங் கமிட்டியின், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ராவணி முதலிடம் பிடித்துள்ளார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

பொதுப்பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடமும் , நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடமும், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில், சமூக ரீதியான இட ஒதுக்கீடு பிரிவு தரவரிசையும், பொது தரவரிசையும் இடம் பெற்றுள்ளது. இதேபோன்று, இன்ஜினியரிங் கவுன்சிலிங் எப்போது துவங்கும்; எந்த, 'கட் ஆப்' மதிப்பெண் உள்ளவருக்கு, எப்போது இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

engineering counsiling announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->