எலான் மஸ்க் எக்ஸ் வலைதள பதிவுகள் ஆய்வு- எலான் மஸ்க் மீது டிரம்ப் ஆலோசகர் பாய்ச்சல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வரி விதிப்பு கொள்கைகள் மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகராக பணியாற்றிய பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பீட்டர் நவரோ, சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தனது கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்தியா, உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பின் தான் ரஷிய எண்ணெயை அதிக அளவில் வாங்கத் தொடங்கியது, இதன் மூலம் வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

அவரது பதிவுகள் மீது எக்ஸ் வலைதள நிர்வாகம் உண்மைத் தகவல் சரிபார்ப்பு (Fact-check) குறிப்புகளை இணைத்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பீட்டர் நவரோ, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க்கை நேரடியாக தாக்கியுள்ளார்.

அவர் தனது பதிவில்,“எலான் மஸ்க் மக்களின் பதிவுகளில் பிரசாரத்துக்கு வாய்ப்பு அளிக்கிறார். ஆனால் உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமாக உள்ளன.

இந்தியா லாபத்திற்காக மட்டுமே ரஷிய எண்ணெயை வாங்குகிறது.ரஷியா உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கவில்லை.

உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்கர்களின் வேலைகளை கவர்ந்து செல்லாதீர்கள்.”என்று பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவை குறிவைத்து விமர்சிக்கும் பீட்டர் நவரோவின் கருத்துகள் அமெரிக்கா-இந்தியா உறவுகளைப் பற்றிய புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk X website posts review Trump advisor attacks Elon Musk


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->