பணமெல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது - தேர்தல் என்று சொல்லி மக்கள் தலையில் இறக்கப்படும் பேரிடி..? - Seithipunal
Seithipunal


தேர்தலை முன்னிட்டு ஆன்லைன் பண பரிவர்த்தனை சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து  தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பார்வைக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் காலங்களில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950 வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் முறையாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்பப்பட வேண்டும்.

இந்த தேர்தல் 2019-ல் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யு டீயூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் தங்களது விளம்பரங்கள் தொடர்பாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்பப்பட வேண்டும்.

மேலும் அரசியல் கட்சிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து, தேர்தல் சிறந்த முறையில் நடத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது அதிகபட்ச பண பரிவர்த்தனைகளை நேரடியாக செய்வதை தவிர்த்து, ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election-officers-money-seized-tn-first-place


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->