#Vellore || உரிய ஆவணம் இன்றி.. கத்தை கத்தையாக சிக்கிய பணம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

உரிய ஆவணம் இன்றி தனி நபர் ஒருவர் 50‌ ஆயிரம் ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேடம் அனுமதியின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதனையும் மீறி பொதுமக்கள் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் செல்வதால் தேர்தல் பறக்கும் படையினரால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சோதனை சாவடியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பழக்கம் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5.86 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? யாருடையது? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election flying squad seized money in Vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->