கத்தை கத்தையாக சிக்கிய 4.5 கோடி.. பாஜக நிர்வாகியை சுத்துப்போட்டு பறக்கும் படை.!! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ரயில் மூலம் பயணம் செய்த 3 பயணிகளிடம் இருந்த 4 சூட்கேஸ்களை ஆய்வு செய்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி 500 ரூபாய் கட்டுகளாக கொண்டு செல்லப்பட்ட 4.5 கோடி  ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர்கள் குறித்து விசாரணை செய்தபோது அதில் ஒரு நபர் பாஜக நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி சதீஷ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 பேரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சதீஷ் புரசைவாக்கத்தில் தனியார் விடுதி மேலாளராக பணிபுரிந்து வருவதும், அவருடைய சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுனர் பெருமாள் ஆகியோர் இந்த பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த தாம்பரம் மாநகர் காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து விசாரணைக்காக தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாஜக நிர்வாகியிடம் 4.5 கோடி ரூபாய் சிக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election flying force seizes rs 4crores 50 lakhs from BJP executive


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->