தேர்தல் முடிந்ததும் தலைவர் வேட்பாளருக்கு நடந்த பெரும் சோகம்.! மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunalதமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆனது முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் சில இடங்களில் சலசலப்பை உண்டாக்கியது. 

இந்தநிலையில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மாறன். நேற்று மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்த அவருக்கு101 வது  எண் டோக்கன் வழங்கப்பட்டது. வாக்களிக்க 5ஆவது வார்டில் வாக்களிக்க நிற்க வேண்டிய மாறன் 4 ஆவது வார்டு வரிசையில் நின்றுள்ளார். 

நாம் தவறுதலாக 4 ஆவது வார்டில் நிற்கிறோம் என்பதை அறிந்து கொண்ட மாறன் உடனடியாக 5 வது வார்டுக்கு சென்ற போது வாக்கு செலுத்துவதற்க்கான நேரம் முடிந்து வாக்குப் பெட்டி சீல் வைத்து விட்டதாக வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாறன், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் எவ்வளோ மன்றாடியும் வாக்குச்சாவடியில் அதிகாரிகள் மாறனை வாக்களிக்க அனுமதிக்க வில்லை. இதையடுத்து மாறன் தனது தலையில் கை வைத்த படியே அந்த வாக்குச்சாவடியிலையே சோகத்துடன் அமர்ந்து விட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election candidate not caste his vote


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal