தோல்வி பயத்தில் வன்முறையை தூண்டுவதா? - கோவை திமுக வேட்பாளர் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


பாஜக தோல்வி பயத்தில் வன்முறையை தூண்டுவதாக, கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டது குறித்து, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் நேற்று 10 மணிக்கு மேல் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், இதனை தட்டி கேட்ட திமுகவினரை பாஜகவினர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இந்த சம்பவம் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், "வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் ஊடுருவ வந்திருக்கிறார்கள்.

கோவையில் எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கி விடுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். 

இதற்கான ஆதாரம் இருக்கின்றது. பாஜகவினரின் விதி மீறல்கள் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றன.

தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கோவை அமைதி விரும்பும் நகரம்.

சத்தமாக பேசினால் கூட கோவை மக்களுக்கு பிடிக்காது. ரவுடிசம் இந்த கோவை மண்ணில் எடுபடாது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election 2024 Coimbatore BJP DMK clash


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->