தமிழகத்தில் ஒரே அலை... அது அதிமுகதான்: இபிஎஸ் பேட்டி.! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சரவணன் என்பவர் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் மதுரையில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை அலுவலகத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, தோல்வி பயத்தினால் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி அ.தி.மு.க குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிக்கின்றனர். 

அ.தி.மு.கவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது இரண்டு கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. தமிழகத்தின் ஒரே அலை தான் வீசுகிறது அதுதான் அ.தி.மு.க. 

ஜனநாயக நாட்டின் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமா தேர்தலில் போட்டியிடலாம். பன்னீர்செல்வம் பெயரில் தேர்தலில் நிற்கும் ஐந்து பேரும் தகுதியானவர்கள். 

அ.தி.மு.க தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி. மக்களிடையே அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு நிறைந்துள்ளது. மதுரையில் அதிமுக தான் அமோக வெற்றி பெறும் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என. தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->