புதிய கல்விக்கொள்கை விவகாரம்.. தமிழக அரசின் முடிவு என்ன?.. முதல்வர் பதில்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு தேவையான பல அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது? என்றும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூட நுழைவு தேர்வு போன்ற தகவல் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "  புதிய கல்விக்கொள்ளை தொடர்பாக ஆராய்ச்சி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே தமிழக அரசு முடிவெடுக்கும். 

புதிய கல்விக்கொள்கையில் நமக்கு உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் தொடர்பாக தமிழக அரசு அமைக்கப்பட்ட குழுவின் முடிவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நுழைவு தேர்வும் இக்குழுவின் முடிவின் அடிப்படையில் தீர்வுகள் காணப்படும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy says about Educational Policy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->