வம்படியாக சென்று சண்டையிழுத்து, வாங்கிக்கட்டிய தருமபுரி எம்.பி.. முதல்வர் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க துவங்கி, கட்டுக்கடங்காத வண்ணம் சென்றது. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா நடவடிக்கை தொடர்பான ஆலோசனையையும் கேட்டு, அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். மேலும், அம்மாவட்ட மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலுக்குமார், தானும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று உடன்பிறப்புகளோடு புறப்பட்டு வந்தார். 

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்தில் பொங்கியெழுந்து, ஆவேசமாக பேசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றார். இன்று தமிழக முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அனுமதி செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர், " ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரிகள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். 

அவ்வாறு வரும் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. அவர்கள் முன்னதாகவே கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும். மாவட்ட அளவிலான அனைத்து அதிகாரிகளும் இங்கு வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா உறுதியானால், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தடைபடும். 

நான் உட்பட அனைத்து அதிகாரிகள், அமைச்சர்கள் என ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். கொரோனா சோதனைக்கு பின்னர் அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம் " என்று கூறினார்.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Explain about Dharmapuri MP Protest issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->