ஐயா உங்களோட செல்பி எடுக்கணும்.. சிறுவனின் ஆசையை அப்படியே நிறைவேற்றிய குழந்தைகளின் முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். தாயாருக்கு இறுதி மரியாதை செய்யும் பொருட்டு முதல்வர் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அவரது தாயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

பின்னர் துக்க இல்லத்திற்கான காரியங்கள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், தமிழக முதல்வரின் வருகையை அறிந்த அக்கட்சி தொண்டர்களும், உள்ளூர் மக்களும் அவரின் இல்லத்தில் இருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் முதல்வரை கண்டுள்ளான்.

விரைந்து அவரிடம் சென்று உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளான். மழலை குரலில் முதல்வரிடம் சற்று அடக்கத்துடன் எளிமையாக சிறுவன் கேட்கவே, சிறுவனின் குழந்தை மனதை புரிந்துகொண்ட முதல்வர், அவருடன் செல்பி எடுக்க சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து புன்னகையுடன் செல்பி எடுத்த சிறுவன் மகிழ்ச்சியுடன் சென்றான். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palanisamy Child Selfie in Salem


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->