எடப்பாடி + ஓபிஎஸ் + டிடிவி + செங்கோட்டையன்.. அதிமுக கட்சியோட இவங்களா ஒன்னா இணைக்கிறது பாஜகதான்! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் அணிகள் உருவாவதும், பிளவுகள் எழுந்ததும், மீண்டும் இணைந்ததும் கடந்த பல ஆண்டுகளாக இயல்பான ஒன்றாகி விட்டது. இப்போது அந்த வரிசையில் ஐந்தாவது அணியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய அலசலுக்கு வழிவகுக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின், ஒருநாள் கூட பிரச்சனையின்றி செயல்படாத அளவுக்கு அதிமுக மாறிவிட்டது. முதலில் சசிகலா, பின்னர் டிடிவி தினகரன், அதன் பிறகு ஓபிஎஸ், இப்போது செங்கோட்டையன் என அணிகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. ஒருகாலத்தில் சசிகலா தலைமையிலான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி, பின்னர் சசிகலாவையே வெளியேற்றினார். அதேபோல் ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஆட்சியை காப்பாற்றிய எடப்பாடி, பின்னர் அவரையும் ஓரம் கட்டினார்.

இந்த நிலைமையில், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அரசியலில் வலுவாக இருக்கும் செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்குடன் எடப்பாடிக்கு எதிராக திரும்பியிருக்கிறார். இதன் மூலம் அதிமுகவில் பலம் வாய்ந்த ஐந்தாவது அணி உருவானது.

ஆனால், இங்கு ஒரு பொதுவான விஷயம் வெளிப்படையாக தெரிகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், எடப்பாடி, இப்போது செங்கோட்டையன் – இவர்களில் யாராயினும் பிரச்சனை வந்தால் அவர்கள் நாடுவது பாஜகவையே.

ஜெயலலிதா மறைவிற்கு பின், முதல்வர் யார் என்பது குறித்த சிக்கலை தீர்த்தது பாஜக தான். பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தத்தையும் சமாளித்து, எடப்பாடி – ஓபிஎஸை சேர்த்து வைத்தது கூட பாஜக. இதனால், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு நிலைத்திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

ஓபிஎஸ் தன்னுடைய தனி அமைப்பை உருவாக்கியது, பாஜக கூட்டணியில் இணைந்தது – எல்லாவற்றிற்கும் மோடியே காரணம் என அவர் நேரடியாகவே பேசியிருந்தார். இடையிடையே அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார்.

அதேபோல், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் கட்சி அலுவலக திறப்பு என்று சொல்லிக் கொண்டு, கார்கள் மாறிமாறி சென்று அமித் ஷாவை சந்தித்தார். சமீபத்தில் ஓபிஎஸ் கூட மீண்டும் டெல்லியில் அமித் ஷாவை சந்திக்க முயன்றார். இப்போது செங்கோட்டையன் ஹரித்துவாருக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, நேரடியாக அமித் ஷா வீட்டிலேயே பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அதிமுகவில் அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் இருந்தாலும், எல்லோருமே பாஜகவின் தயவை நாடி வருகின்றனர் என்பது வெளிப்படையாகி விட்டது.

இப்போது முக்கியமான கேள்வி – 2026 தேர்தலை முன்னிட்டு பாஜக யாருக்கு ஆதரவு தரப்போகிறது?எடப்பாடி பழனிசாமியா?ஓபிஎஸா?டிடிவி தினகரனா?அல்லது தற்போது முன்னிலைக்கு வந்த செங்கோட்டையனா?இந்தக் கேள்விக்கான பதில்தான் எதிர்கால அதிமுக – பாஜக உறவுகளையும்,2026 அரசியல் சூழலையும் தீர்மானிக்கப் போகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi OPS TTV Sengottaiyan BJP is the one connecting these with the AIADMK party


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->