#சற்றுமுன்: சட்டப்பேரவையில் கடும் கோவத்தில் கத்தி பேசிய தமிழக முதல்வர்! நடந்த சம்பவம் என்ன?!  - Seithipunal
Seithipunal


மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று காலை இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கிடையே வெளியான தகவலின்படி, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆறு மசோதா தாக்கல் உள்ளதாகவும். அதில், முக்கியமான கொரோனா விவகாரம் குறித்து ஒரு மசோதா தாக்கல் பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று சட்டப்பேரவை கூட்ட தொடரில் பேசிய துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அமரலாம், ஆனால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர்கள் நெருக்கமாக அமரலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி இன்னும் பள்ளிகள் செயல்படவில்லையே என்று பதிலளித்தார். 

இதனையடுத்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், "திமுக என்றும் நீட் விவகாரத்தில் எதிராகத்தான் உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது நீட்தேர்வு நடைபெறவில்லை. நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.

முக ஸ்டாலின் உரைக்கு பதிலளித்த தமிழக முதல்வர், "இந்த நீட் தேர்வை யார் கொண்டு வந்தார் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்திட வேண்டாம். நீட் தேர்வுக்கு காரணமே திமுக தான். ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்து திமுக வரலாற்று பிழையை செய்துள்ளது." என்று ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Angry at Tamilnadu Assembly meet about DMK Fake Politics NEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->