100 நாள் வேலைத் திட்டமானது, இனி 200 நாள் வேலைத் திட்டமாக மாற்றம்!! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் மக்களவை தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அணைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்திருக்கும், பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணியாக இருந்துவருகிறது. இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சீர்காழி பேருந்து நிலையம் பின்புறம் மேடை அமைக்கப்பட்டு அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்காழி வருவதையடுத்து, ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக கூடியிருந்தனர். இதனையடுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், நன்னிலம் போன்ற பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இன்று காலை சீர்காழி வந்த முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்கள் முன்பு பேசுகையில் ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்தார். அவர் பேசும்போது இதுவரை உள்ள 100 நாள் வேலைத் திட்டமானது 200 நாள் வேலைத் திட்டமாக மாற்ற முயற்சி செய்யப்படும் என கூறினார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பலத்த கரவோசையை எழுப்பினர்.

மேலும் இந்திய மக்கள் பாதுகாப்பாகவும், நாடு அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றால் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும். எனக் கூறினார். மேலும், காவிரியையும் கோதாவரியையும் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். இதற்காக அதிகப்படியான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanichami talking in seergali


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->