இன்றே கடைசி நாள்.. தேர்தல் அதிகாரி விடுத்த எச்சரிக்கை.!!! - Seithipunal
Seithipunal


இந்தியாவை எதிர்பார்த்த மக்களவை பொதுத் தேர்தல், ஐந்து மாநில பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார். 

அதன்படி நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது அவற்றில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமானால் இன்று மாலைக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

இதேபோன்று ஏப்ரல் ஒன்றாம் தேதியை முன் தேதியிட்டு 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ள இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். மேலும் இந்த கடைசி வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI announced today Last date to correction in voter id


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->