#விருதுநகர் || முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராமன் என்பவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதில் விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமனும் அடங்குவார்.

இவருடைய பணி மாறுதல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் முறைகேடாக விருதுநகர் மாவட்டத்தில் பணம் பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணைகள் மற்றும் பணி மாறுதல் ஆணைகள் வழங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 13 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இந்த நிலையில் இன்று காலை ராமனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் அவருடைய உதவியாளர் திருச்செல்வராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC raids viruthunagar principal education officer house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->