லவ்வர்ஸ் போல் தனியே சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் - நிர்வாகிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அட்வைஸ்..! - Seithipunal
Seithipunal


காதலர்கள் போல தனியே சென்று வாக்கு சேகரியுங்கள் என, திமுக வேட்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள் என பல தரப்பில் இருந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்து உள்ளது. 

இந்நிலையில், குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரின் அந்த உரையில், "முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் வரும் 25 ஆண்டுகள் இருக்கும். முதல்வர் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். ஆட்சி அமைத்ததில் இருந்து சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறோம்.

ஆளும் கட்சியாக தி.மு.க. இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிபெற்று குடியாத்தம் நகர மன்றத்தை கைப்பற்றினால் தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

ஓட்டுசேகரிப்பின் போது கூட்டமாக சென்றால் ஓட்டுபோடுவேன் என்று தான் சொல்லுவார்கள் இல்லையேன்றால் தலைமட்டும் ஆட்டுவார்கள். அதனால், அப்படி செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரியுங்கள்." இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan gave a advise


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal