மாநகராட்சியில் ஏற்பட்ட தீ விபத்தால் தீயணைப்பு துறையினருக்கு மூச்சுதிணறல் ..! - Seithipunal
Seithipunal


 கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டதனால் பழைய கோப்புகள் எரிந்தது தொடர்பாக, துறை ரீதியான விசாரணைக்கு, கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார் 

மத்திய மண்டல அலுவலகம் அருகே கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் ஆய்வுக்கு வரும் உயரதிகாரிகள், இங்கு தங்காமல், அரசு விருந்தினர் மாளிகை அல்லது நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லுவதால்  ஆய்வு மாளிகையின் முதல் தளத்தில் பழைய கோப்புகள் மற்றும் கீழ்தளத்தில் பிளீச்சிங் பவுடர்களை  வைதந்திருந்தனர். 

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய கோப்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடரில் தீ பரவியது.

தீயை அணைக்க சென்ற தீயணைப்பு அலுவலர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.  இந்த நிகழ்வு மாநகராட்சி கமிஷ்னரான பிரதாப் கவனத்துக்கு சென்றதும்,  அவர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதன் பின், தீ விபத்து நடந்தது தொடர்பான கோப்பு தயார் செய்யப்பட்டு, பிரதான அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது லஞ்ச ஒழிப்பு துறை, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளிலும்  விசாரணையில் இருக்கின்றன. 

இச்சூழலில் தீ விபத்து ஏற்பட்டு, பழைய கோப்புகள் எரிந்திருப்பது, அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைப்பற்றி தீயணைப்பு துறையினரிடம் கேட்டபோது, 'மாநகராட்சி அலுவலகத்தில் பழைய காகிதங்கள் கட்டு கட்டாக இருந்தன.  அவையனைத்தும் கோப்புகளா என எங்களுக்கு தெரியாது' என்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to the fire accident in the corporation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->