துபாய் அடுக்குமாடி வளாக தீ விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழப்பு - அன்புமணி இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal



துபாய் அடுக்குமாடி வளாக தீ விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழப்புக்கு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "துபாய் அடுக்குமாடி வளாகத்தில்  நேற்று முன்நாள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக்  ஆகிய இரு தமிழர்கள்  உள்ளிட்ட 16   பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக்  ஆகிய இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்  மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..

முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss mourning to Dubai Apartment accident Death


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->