தில்லி, ஹரியானாவை போல் தமிழகத்திலும் இலவசமாக தரவேண்டும் - டாக்டர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.! - Seithipunal
Seithipunal


தில்லி, ஹரியானாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை தில்லி அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைத் தடுக்க  60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக  ஏற்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது.  அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான  அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது  மிகவும் அவசியமாகும்.

60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி  தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadas Say About Free Booster Vaccine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->