இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்- பிரேமலதா விஜயகாந்த்
Donot ask me questions about the alliance and Vijay from now on Premalatha Vijayakanth
திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு, பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கே பூத் கமிட்டி உள்ளது.உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான்; அதை நாங்கள் 1990-களிலிருந்து பார்த்து வருகிறோம்.
விஜயகாந்திற்கும் பெருமளவு கூட்டம் கூடியது; அதேபோல் விஜய்க்கும் கூட்டம் கூடியுள்ளது.விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்தியிருந்தால், இன்னும் சிறப்பாக செயல்படலாம்.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருவதால், அவரை விமர்சிப்பது இயல்பானது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர்; அவருடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது.விஜய் குறித்து கேள்விகள் இருந்தால் அவரிடமே கேட்க வேண்டும். இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
அனைத்து கட்சிகளும் எங்களது நண்பர்களே; கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் உள்ளது.விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், கட்சியின் வளர்ச்சியில்தான் முழு கவனம் செலுத்துகிறோம்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
English Summary
Donot ask me questions about the alliance and Vijay from now on Premalatha Vijayakanth