கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கடன் பணத்தை கேட்டு மிரட்டி வந்தாதால் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கரங்க்த ஓராண்டுக்கு முன் மாவட்ட குடும்ப நல மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனரான டாக்டர் லெட்சுமணனிடம் 1 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

அந்த கடனை கேட்டு அவர் அடிக்கடி சீனிவாசனிடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சீனிவான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, அவரின் மனைவி தனது கணவனின் தற்கொலைக்கு காரணம் லட்சுமணம் தான் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor Suicide Near Theni Due to loan issue


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal