திமுக வேட்பாளருக்கு எதிராக பொங்கிய மக்கள்.. ஸ்டாலின் ஸ்டிக்கரை கிழித்தெறிந்து ஆவேசம்.. பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதலில் வரவேற்று பொன்னாடை அணிவித்த ஊராட்சி மன்ற தலைவர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமார் களமிறங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கே.சி பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, வடகவுஞ்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

குப்பம்பட்டி பகுதியில் அவருக்கு திமுகவினரின் ஏற்பாட்டின் பேரில் பெண்கள் சாலையில் குத்தாட்டம் போட்டு வரவேற்பை அளித்த நிலையில், ஊர் பூசாரி ஒருவர் அருள் வாக்கு கூறுவதாக கூறி வேட்பாளரின் நெற்றியில் திருநீறு பூசி, தலை முடியை பிடித்து ஆட்டி அருள்வாக்கு கூறினார். 

இதனால் அதிர்ந்து போன செந்தில்குமார் அந்தப் பூசாரியின் காலில் விழுந்து ஆசி பெற்ற நிலையில், அவர் வெற்றி பெறுவார் என்று அருள்வாக்கு கூறுமாறு உடன் வந்த திமுக உடன்பிறப்புகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில், அருள்வாக்கு நேரம் எடுத்துக் கொண்டே போனதால், சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று ஒரு நிர்வாகி சொல்ல, பூசாரி தனது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில்,  பொன்னாடை அணிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் புகைப்படத்தை பதிவு செய்து, அவர் திமுகவிற்கு ஆதரவு வாங்கிவிட்டார் என்றும், பூசாரி அருள்வாக்கு கூறிவிட்டார் என்றும் முகநூலில் திமுகவினர் பதிவு செய்துள்ளனர். 

இதனைக்கண்டு பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகிய ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து பதில் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவினர் ஓட்டிச்சென்ற மு.க ஸ்டாலினின் விளம்பர படத்தை கிழித்தெறிந்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Palani Candidate opposition by Local Villagers 3 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal