ஹிந்தி கற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை - கனிமொழி அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மும்மொழி கொள்கை அவசியமில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கான தேவை என்ன என்பதை அவர்கள் சொன்னால்தான், நாம் அதைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

தற்போது தமிழகத்தில் அதற்கான தேவையில்லை. நமக்கு இடையே பேசிக்கொள்ளும் போது நம்முடைய பாரம்பரியம், நம்மளுடைய அடையாளம், நம்முடைய தாய்மொழி தமிழ் உள்ளது.

உலக மக்களோடும், நாட்டின் மற்ற பகுதி மக்களோடு பேசுவதற்கும் ஆங்கிலம் உள்ளது. அதனால் ஆங்கிலம் படிக்கக்கூடிய அவசியம் இருக்கிறது.

இந்த இரண்டைத் தாண்டி இன்னொரு மொழி கற்றுக் கொள்வதற்கு என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அதற்கு யாரும் தடை விதிக்க போவதில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கை அவசியம் என்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும், ஆளுநரின் திருவள்ளுவர் குறித்த கருத்துக்கு பதிலளித்த கனிமொழி, "திருக்குறள் பற்றிய அடிப்படை, திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்பதுதான் ஆளுநரின் பதிவு காட்டுகிறது. 

ஏனென்றால் திருவள்ளுவர் ஒரு துறவி என்று யாருமே சொன்னது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருந்ததாகவும் ஒரு கருத்து இருக்கிறது. 

திருக்குறளில் மதம் சார்ந்த அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே, சனாதனத்தையோ, இந்து தத்துவத்தையே இல்லை வேறு எந்த மதத்தையுமே திருவள்ளுவர் மீது திணிக்க முடியாது. இதுதான் நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்களைக் கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்தின் நிறமான கருப்பு நிறத்திலேயே திருவள்ளுவருக்கு உடை அணியலாம். வேறு எந்த நிறத்திற்கும் வாய்ப்பு இல்லை" என்று கனிமொழி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Kanimozhi Say About Hindi And Thiruvalluvar issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->