திமுக கூட்டணிக்குள் கலா சலா... ஸ்டாலின் மறைமுக பேச்சின் பின்னணி என்ன?..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். 

அதிமுக அமைச்சர்கள் பலரும் வெற்றியடைந்துள்ள தொகுதிகளில் பணம் விளையாடும். அதனை நாம் நமது பலத்தை வைத்து முறையடிக்க வேண்டும். 200 தொகுதிகள் என்பது நமது இலக்கு. அதனை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 200 தொகுதிகளில் ஒரு இன்ச் அளவு கூட விடக்கூடாது. 

திமுகவின் கூட்டணி கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த விஷயங்களை தலைமை பார்த்துக்கொள்ளும். நீங்கள் கழகத்தின் வெற்றியை உறுதி செய்ய உழைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார். 

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிகளவு தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரோடு பிரச்சனை இருந்து வருவதாகவும் தெரியவருகிறது. 

இதனைப்போன்று திமுகவிடம் கூட்டணியாக அங்கம் வகித்து தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகள், தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிட நினைத்து காய் நகர்த்தி வருகிறது. ஆனால், இது போன்ற செயல்களால் திமுகவின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது என்று எண்ணி திமுக தலைமை கூட்டணி கட்சிகளும் உதயசூரியனின் சின்னத்தில் களம்காண வேண்டும் என்று வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இவர்களின் பிரச்சனை களத்தில் தேர்தல் வெற்றியை பாதிக்கக்கூடாது என்பதால், திமுகவின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த விஷயத்தையும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Suspense Speech about DMK Alliance 20 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal