ஓ.பி.எஸ் கைவசம் இருந்த முக்கிய துறையில் ரூ.2500 கோடி அரசுப்பணம் வீணடிப்பு?. அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


ஒப்பந்ததாரர்கள் பலன் பெறுவதற்காக குடிசை மாற்று வாரியத்தில் ரூ.2,500 கோடி அரசு பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 

தேனியில் தமிழக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தேனி, மதுரை மாவட்டங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தோம். கடந்த அதிமுக அரசின் ஆட்சியில் அன்றைய துணை முதல்வர் ஓ.பொன்னேர் செல்வம் கீழ் இந்த துறை இருந்தது.

இந்த துறை சார்பாக மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 35 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வகை ஆற்றங்கரையில் இருக்கும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடமாற்றம் செய்த பின்னர் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மக்கள் இங்கு வந்து வசிக்கவில்லை. 

இதனை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதனால் வீடுகள் இல்லாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களை தேர்வு செய்து அங்கு குடியமர்த்த திட்டமிட்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீடுகளை புதுப்பித்து மீண்டும் வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். 

கடந்த ஆட்சிக்காலத்தில் இதனைப்போன்ற பணிகள் அரசால் கவனம் செலுத்தப்படவில்லை. சில பயன் பெறுவதற்காக ரூ.2500 கோடி அரசு பணம் வீணடிப்பு சேக்கியப்பட்டுள்ளது. தேவையில்லாத இடங்களில் திட்டத்தை கொண்டு வந்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த இழப்பை ஏற்படுத்தியது அன்றைய துணை முதல்வர் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தான் " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Anbarasan Pressmeet about AIADMK OPS Housing Ministry Waste Rs 2500 Crore Govt Money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->