நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் - பரபரப்பு மனு! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், சதீசும், நவீனும் சகோதரர்கள் என்றும், இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இந்த பணத்தை நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Complaint Election Commission against BJP Nayanar Nagendran 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->