குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 4வது வெற்றி!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த 52 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் குஜராத் அணியும் மோதின.பெங்களூர் அணியில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை கடந்த போட்டியில் விளையாட வீரர்களே இப்போட்டியிலும் விளையாடினார்கள். குஜராத் அணியில் சாய் கிஷோர்,அஸ்மதுல்லா நீக்கப்பட்டு ஜோஸ் லிட்டில் மற்றும் அறிமுக வீரரான மனாவ் சுதர் இடம் பெற்றனர்.

டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய குஜராத் அணி ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி தொடக்க ஆட்டக்காரர்களில்  விக்கெட்டுகளை கைப்பற்றியது. குஜராத் தண்ணி 193 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


போட்டியின் இரண்டாம் பாதியில் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பெங்களூர் அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன விராட் கோலியும் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ்சும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 27 பந்துகளின் 42 ரன்கள் அடித்து வெளியேறினார். பாப் டுபிளிஸ்சிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 13.4 ஓவர்களில் பெங்களூர் அணி 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru team beat Gujarat team for 4th win


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->