பட்டாசு வெடிக்கும் முன் நீங்க செய்ய வேண்டியது.! செய்ய கூடாதது.!  - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். இது குறித்து தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* ஒரு வாளியில் தண்ணீரை எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் அருகில் வைத்திக்கவேண்டும்.

* வெடிக்காத பட்டாசுகள் மீதும், உபயோகப்படுத்தப்பட்ட கம்பி மத்தாப்புகள் மீதும் தண்ணீர் தெளிக்கப்படவேண்டும். 

* நீண்ட பத்திக்குச்சியை பயன்படுத்தி நின்ற நிலையிலேயே, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்கச்செய்ய வேண்டும்.

* சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களது கண்காணிப்பிலேயே வெடிக்கச் செய்யவேண்டும். 

* பட்டாசுகளை சட்டை மற்றும் கால் சட்டை பைகளில் போடுவதற்கு அனுமதிக்க கூடாது.

* பட்டாசு வெடிக்கும் போது கண்டிப்பாக காலணிகளை அணிந்திருப்பதுடன், பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு கழுவ வேண்டும். 

* உடலோடு ஒட்டிய பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்திட வேண்டும்.

* 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கவேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கையில்எடுக்கக்கூடாது. 

* வீட்டுக்குள் மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதிகளில் ஒருபோதும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. 

* ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசுகளை குவித்து வைத்தோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ வெடிக்கக்கூடாது.

* பட்டாசுகளை கைகளில் பிடித்தவாரோ அல்லது தூக்கி வீசியோ, பாட்டில்கள், தேங்காய் சிரட்டை மற்றும் பிற உபகரணங்களில் வைத்தோ வெடிக்கக்கூடாது. 

* காதுகளை பாதிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திடவேண்டும்.

* பட்டாசுகள் வெடிக்கும்போது காயம் ஏற்பட்டால் அப்பகுதியை உடனடியாக குழாய் நீரில் படுமாறு காண்பிக்கவேண்டும். ஒருபோதும் தேய்த்து கழுவக்கூடாது. 

* தீக்காயத்தின் மீது இங்க், மை போன்றவற்றை தடவக்கூடாது. காயத்தின் தன்மைக்கேற்ப 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் 101 என்ற எண்ணில் தீயணைப்பு வாகனங்களை தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali safety tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->